தேவையான பொருட்கள்:
1 .இஞ்சி – 1 துண்டு
2 .பூண்டு – 1 பல்
3 .பச்சை மிளகாய் – 2
4 . சிவப்பு மிளகாய் – 3
5 . தயிர் – 2 ஸ்பூன்
6 . புதினா இலைகள்
7 . கொத்துமல்லி தழை
8 . பாஸ்மதி அரிசி – 2 டம்ளர்
9 . உருளைக்கிழங்கு – 200 கிராம்
10 . நெய் எண்ணெய் தேவையான அளவு
11 .வெங்காயம் – 4
12 . மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
13 . அன்னாசி பூ,
14 . ஏலக்காய்,
15 . பட்டை,
16 . கிராம்பு,
17 . பிரியாணி இலை
18 . குங்குமப்பூ
19 . உப்பு
உருளைகிழங்கு தம் பிரியாணி – Aloo Dum Biryani Recipe in Tamil – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
200 கிராம் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும்.அரிசியை சமைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்றிய பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து அதனுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து அதை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
Step – 2:
மசாலா விழுது தயாரிக்க, மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, காய்ந்த சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
Step – 3:
அடுத்து நன்கு (4) வெங்காயத்தை மெல்லிதாக நறுக்கி அதை வறுத்து வைக்கவும்.
Step – 4:
அடுத்து ஒரு கடாயில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.அடுத்து சூடான பாலில் குங்குமப்பூ சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
Step – 5:
பிரியாணி சமைக்க ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடேற்றிய பின்பு அதனுடன் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து நன்கு வதக்கவும். இந்த கலவையில் அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும். பச்சை மனம் போன பின்பு இதில் வேகவைத்த உருளைகிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து இதில் வறுத்த வெங்காயம் சேர்த்து நன்கு கிளறிய பின்பு வேகவைத்த அரிசியை சேர்த்து நன்கு பரப்பி விடவும்.இதனுடன் கரைத்த குங்குமப்பூ பால் சேர்த்து மேலும் வறுத்த வெங்காயம் சேர்த்து கடையை ஒரு ஐந்து நிமிடம் மூடிவைக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பின்பு சூடான மற்றும் சுவையான உருளைகிழங்கு தம் பிரியாணி தயார்
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.