Site Overlay

Murukku Recipe in Tamil – Quick Murukku Recipe – Rice flour recipe – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. தண்ணீர் – 1 கப்
2. உப்பு தேவையான அளவு
3. நெய் -2 ஸ்பூன்
4. அரிசி மாவு – 1 கப்
5. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
6. பெருங்காயம் சிறிதளவு
7. எண்ணெய் முறுக்கு செய்ய தேவையான அளவு

Murukku Recipe in Tamil – Quick Murukku Recipe – Rice flour recipe – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் – 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் -2 ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

     

Step – 2:
கொதித்ததும் அரிசி மாவு – 1 கப், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும்.

அடுப்பை அணைத்து கலந்து ஒரு 10 நிமிடம் வைக்கவும்.

 

Step – 3:
10 நிமிடம் கழித்து கைதாங்கும் அளவு சூடு இருக்கும் போது நன்கு கலந்துகொள்ளவும். முறுக்கு பிழியும் அச்சில் எண்ணெய் தடவி முறுக்கு மாவு சேர்க்கவும் முறுக்கு பிழியவும்.

   

Step – 4:
சூடான எண்ணையில் போட்டு நன்கு பொறித்து எடுக்கவும் நம்முடைய மொறு மொறு முறுக்கு தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.