தேவையான பொருட்கள்:
1. கடலை பருப்பு – 1 டம்ளர்
2. சீரகம் – 1/2 ஸ்பூன்
3. சோம்பு – 1/2 ஸ்பூன்
4. கறிவேப்பில்லை சிறிதளவு
5. உப்பு தேவையான அளவு
6. பெருங்காயம் சிறிதளவு
7.பச்சை மிளகாய் – 3
8. இஞ்சி – 2 இன்ச்
9. பூண்டு – 10 பல்
10. எண்ணெய் வடை செய்ய தேவையானளவு
Masala Vada Recipe in Tamil | Masala Vadai | Paruppu Vadai Recipe | Masal Vada Recipe | பருப்பு வடை | மசாலா வடா | மசால் வடை –என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொள்ளவும். சூடான தண்ணீரில் கடலைப்பருப்பு – 1 டம்ளர் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிடவும்.
Step – 2:
(2 மணி நேரம் கழித்து) பருப்பு நன்கு ஊறிவிட்டது. ஒரு மிக்சிஜரில் சீரகம் – 1/2 ஸ்பூன்,சோம்பு – 1/2 ஸ்பூன் சேர்த்து பச்சை மிளகாய் – 3,கறிவேப்பிலை சிறிதளவு இஞ்சி – 2 இன்ச் , பூண்டு – 10 பல் ,பெருங்கய்யாம் சிறிதளவு உப்பு தேவையானளவு சேர்த்து ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து கொரகொரவென அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
Step -3 :
ஒருமுறை அனைத்தையும் நன்கு கலந்து வாணலியில் வடை செய்ய தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் வடை செய்து பரிமாறவும். நம்முடைய சுவையான மொறு மொறு பருப்புவடை தயார்
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.