தேவையான பொருட்கள்:
1. குதிரைவாலி இட்லி மாவு தேவையான அளவு
2. எண்ணெய் – 3 ஸ்பூன்
3. சீரகம் – 1/2 ஸ்பூன்
4. கடுகு – 1/4 ஸ்பூன்
5. கறிவேப்பிலை சிறிதளவு
6. வெங்காயம் – 1
7. மல்லித்தழை சிறிதளவு
8. மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன்
9. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
10. உப்பு சிறிதளவு
11. நெய் தேவையான அளவு
Kuthiriaivali KaraKuzhi Paniyaram – Barnyard Millet Paniyaram – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் – 3 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு,
வெங்காயம் – 1 சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
Step – 2:
பின் மல்லித்தழை சிறிதளவு சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பை அனைத்து குதிரைவாலி இட்லி மாவு தேவையான அளவு ஒரு பாத்திரத்தில் எடுத்து வதக்கியதை சேர்த்து அதனுடன் மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும் பணியாரம் மாவு தயார்
Step – 3:
பணியாரப்பானில் நெய் சேர்த்து தயார் செய்த மாவை சேர்த்து நன்கு வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து சட்னி னுடன் பரிமாறவும் நம்முடைய குதிரைவாலி பணியாரம் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.