Site Overlay

Veg Kurma in Tamil / ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ரகசியம் / Vegetable Kurma for Chapathi in Tamil , for rice, parotta -Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. தேங்காய் சிறிதளவு
2. முந்திரி – 10
3.கசகசா – 1 ஸ்பூன்
4. எண்ணெய் – 5 ஸ்பூன்
5. சோம்பு – 1/2 ஸ்பூன்
6. கருவேப்பில்லை சிறிதளவு
7. பூண்டு – 5 பல்
8. பச்சை மிளகாய் – 2
9. வெங்காயம் – 1 மீடியம் சைஸ்
10. தக்காளி – 2
11. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
12. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
13. மல்லித்தூள் – 1 ஸ்பூன்
14. பிரெஷ் பட்டாணி – 1 கப்
15. பீன்ஸ் – 1 கப்
16.கேரட் – 1 கப்
17. தண்ணீர் தேவையான அளவு
18. உப்பு தேவையான அளவு

Veg Kurma in Tamil / ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ரகசியம் / Vegetable Kurma for Chapathi in Tamil , for rice, parotta –எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சிறிதளவு,முந்திரி – 10, கசகசா – 1 ஸ்பூன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

Step – 2:
ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1/2 சோம்பு,கருவேப்பிலை சிறிதளவு ,பூண்டு 5 பல் சேர்த்து அத்துடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

Step – 3:
1 வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

Step – 4:
பின் 2 தக்காளி சேர்த்து அத்துடன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,கொத்தமல்லிதூள் – 1 ஸ்பூன் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

Step – 5:
பின் பிரெஷ் பட்டாணி – 1 கப், பீன்ஸ் – 1 கப்,கேரட் – 1 கப் சேர்த்து காய் வேகா தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய் பாதி வெந்ததும் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறிவிடவும்.உப்பு தேவையான அளவு சேர்க்கவும்

காய் நன்கு வெந்ததும் குருமா கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். நம்முடைய சுவையான காய்கறி குருமா ரெடி…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *