Site Overlay

Potato Gravy / Side dish recipe / Goki’s Kitchen

உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - தேவையான அளவு 
2. எண்ணெய் - தேவையான அளவு
3. சின்ன வெங்காயம் - 8
4. பூண்டு - 10 cloves
5. மல்லித்தழை சிறிதளவு 
6. தக்காளி - 2
7. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
8. மல்லித்தூள் - 1 ஸ்பூன் 
9. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் 
10. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன் 
11. காஸ்மீர் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
12. பெருங்காயம் சிறிதளவு 
13. உப்பு தேவையான அளவு 
14. சீரகம் - 1/2 ஸ்பூன் 
15. கறிவேப்பிலை - சிறிதளவு 
16. பச்சைமிளகாய் - 1

Potato Gravy – உருளைக்கிழங்கு கிரேவி – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு வேகவைக்கவும். 80% வெந்ததும்அதை வடிகட்டி தனியே வைக்கவும்.

     

Step – 2:
ஒரு வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன் சேர்த்து சின்ன வெங்காயம் – 8, பூண்டு – 10 சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் தக்காளி – 2 சேர்த்து கொஞ்சம் மல்லித்தழை சேர்த்து தக்காளி மாசியும் வரை வதக்கவும்.

     

Step – 3:
தக்காளி வதங்கியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன்,

மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு உப்பு தேவையான அளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் பின் அடுப்பை அணைத்து விடவும்.

Step – 4:
நன்கு ஆறியதும் மிஸ்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

 

Step – 5:
அதே வாணலியில் எண்ணெய் -3 ஸ்பூன் சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சைமிளகாய் – 1 சேர்த்து அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து நன்குகலந்து விடவும்.

Step – 6:
வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்துவிடவும் பின் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு மூடி போட்டு மூடவும் கிரேவி கெட்டியானது அடுப்பை அணைக்கவும். 

Step – 7:
நம்முடைய சுவையான மணமான உருளைக்கிழங்கு கிரேவி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/potato-gravy-potato-side-dish-recipe-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *