பச்சை பட்டாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
1. தக்காளி – 1
2. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
3. சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்
4. காஸ்மீர மிளகாய்த்தூள் – 1/2ஸ்பூன்
5. மிளகாய்த்தூள் – 1/2ஸ்பூன்
6. பூண்டு – 10 பல்
7. எண்ணெய் – 2 ஸ்பூன்
8. சீரகம் – 1/2 ஸ்பூன்
9. கருவேப்பில்லை சிறிதளவு
10. பட்டாணி – தேவையான அளவு (8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்)
11. உப்பு தேவையான அளவு
12. பெருங்காயம் சிறிதளவு
Pachai Pattani masala in Tamil / Green peas masala / Peas masala / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
முதலில் ஒரு மிஸ்சிஜரில் தக்காளி – 1, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்,
காஸ்மீர மிளகாய்த்தூள் – 1/2ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2ஸ்பூன், பூண்டு – 10 பல் தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்து தனியே வைக்கவும் .
Step – 2:
ஒரு வாணலியில் எண்ணெய் – 2 ஸ்பூன், சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பில்லை சிறிதளவு சேர்த்து கலந்து பின் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்துவிடவும் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கொதிக்கவிடவும்.
Step – 3:
எண்ணெய் பிரியும் அளவுக்கு சமைக்கவும். பின் உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து கலந்து பட்டாணி – தேவையான அளவு (8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்) சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். மூடி போட்டு 10 நிமிடம் low flame யில் வைக்கவும்.
Step – 4:
10 நிமிடம் கழித்து அடுப்பைஅணைக்கவும்.
நம்முடைய சுவையான பட்டாணி மசாலா தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/pachai-pattani-masala-green-peas-masala-peas-masala-gokis-kitchen/