தேவையான பொருட்கள்:
1. தக்காளி – 3
2. பூண்டு – 3 பல்
3. சீரகம் – 1 ஸ்பூன்
4. மிளகு – 2 ஸ்பூன்
5. மிளகாய் வத்தல் -10
6. கறிவேப்பிலை சிறிதளவு
7. மல்லித்தழை சிறிதளவு
8. உப்பு தேவையான அளவு
9. எண்ணெய் தேவையான அளவு
10. பெருங்காயம் சிறிதளவு
11. கடுகு – 1/2 ஸ்பூன்
மிளகு ரசம் – Milagu Rasam in Tamil – Pepper Rasam Recipe in Tamil –செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு மிஸ்சிஜரில் தக்காளி – 1, பூண்டு – 3 பல், மிளகாய் வத்தல் -10, சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 2 ஸ்பூன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். தனியே வைக்கவும்.
Step – 2:
வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு|
மிளகாய் வத்தல் – 2 சேர்த்து, 2 தக்காளியை கையால் நன்கு மசித்து சேர்த்துக்கொண்டு வதக்கவும்.
Step – 3:
பின் அரைத்த ரசம் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு
சேர்த்து பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விடவும். கொத்தி வந்ததும் அடுப்பை அனைத்து மல்லித்தழை சிறிதளவு சேர்த்து பரிமாறவும். நம்முடைய சுவையான மிளகு ரசம் தயார்
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.