தேவையான பொருட்கள்:
1. கடலை பருப்பு – 1&1/2 கப்
2. சிக்கன் 200 கிராம் (எலும்பு இல்லாத சிக்கன்)
3. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
4. மிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன்
5. மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்
6. உப்பு தேவையான அளவு
7. தண்ணீர் சிறிதளவு
8. கறிவேப்பில்லை சிறிதளவு
9. கொத்தமல்லித்தழை சிறிதளவு
10.பச்சை மிளகாய் – 2
11. இஞ்சி – சிறிதளவு
12. பூண்டு – 10 பல்
13. சின்ன வெங்காயம் – 15
14. வடை செய்ய தேவையான அளவு எண்ணெய்
சிக்கன் வடை | Chicken Vada Recipe in Tamil – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் 1&1/2 கப் கடலை பருப்பு 1&1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
Step – 2:
குக்கரில் 200 கிராம் சிக்கன் சேர்த்து மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்,மிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன்,மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு ,தண்ணீர் சிறிதளவு சேர்த்து சிக்கன் நன்கு வேகும் வரை விசில் விட்டு எடுக்கவும்.
Step – 3:
விசில் வந்ததும் குக்கரை திறந்து சிக்கனில் உள்ள தண்ணீரை வத்தவைக்கவும்.
Step – 4:
பின் ஒரு மிக்சிஜரில் ஊறவைத்த கடலை பருப்பு கறிவேப்பில்லை சிறிதளவு ,கொத்தமல்லித்தழை சிறிதளவு
பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிதளவு , பூண்டு – 10 பல் , சின்ன வெங்காயம் – 15 வேகவைத்த சிக்கன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
Step – 5:
ஒரு வாணலியில் வடை செய்ய தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் சிக்கன் வடையை போட்டு எடுக்கவும் நம்முடைய சுவையான சிக்கன் வடை தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.