தேவையான பொருட்கள்:
- ஆப்பிள் – 1
- சர்க்கரை – 3 டீஸ்பூன்
- கோதுமை மாவு – 2 ஸ்பூன் (கரண்டி)
- பால் தேவையான அளவு
- வெண்ணை தேவையான அளவு
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோதுமை மாவு ஆப்பிள் தோசை /Apple Pancakes recipe for kids & Elders எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு மிக்சிஜரில் ஒரு ஆப்பிள் பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் மூணு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும் (அல்லது) நாட்டு சர்க்கைரை சேர்க்கவும்.பின் கோதுமைமாவு 2 கரண்டி சேர்த்து ஒரு முறை அரைத்து கொள்ளவும். பின் காய்ச்சி ஆறவைத்த பால் சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
Step – 2:
மாவை தோசை மாவு பதத்தில் தயாரிக்கவும்.கெட்டியாக இருந்தால் சிறிதளவு காய்ச்சி ஆறவைத்தபாலை சேர்த்து நன்கு கலந்து தோசை மாவு பதத்தில் தயார் செய்து கொள்ளவும்.
Step – 3:
தவாவை மிதமான தீயில் வைத்து, நெய் அல்லது வெண்ணெயைத் தடவவும்.
கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து சின்னச் சின்ன வட்டங்களாக ஊற்றவும்.வெந்ததும் திருப்பி போட்டு வேக வைக்கவும். திருப்பி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.கோதுமை ஆப்பிள் பான் கேக் ரெசிபி ரெடி .
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.