செய்ய தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் – 4 ஸ்பூன்
2. கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
3. புளி சிறிதளவு
4. மிளகாய் வத்தல் – 12
5. தேங்காய் சிறிதளவு
6. கறிவேப்பிலை சிறிதளவு
7. கடுகு – 1/4 ஸ்பூன்
8. சீரகம் – 1/4 ஸ்பூன்
9. மிளகாய் வத்தல் – 2
10. பெருங்காயம் சிறிதளவு
11. உப்பு தேவையான அளவு
Kadala Paruppu Chutney / Side dish for idly dosa in tamil /செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய், 3 ஸ்பூன் கடலைப்பருப்பு, சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
Step – 2:
புளி சிறிதளவு சேர்த்து, 12 மிளகாய் வற்றல் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் (Low Flame). அடுப்பை அணைக்கவும்.
Step – 3:
மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
Step – 4:
அரைத்து, தேங்காய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்து தனியே வைக்கவும்.
Step – 5:
தாளிக்க எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன்
மிளகாய் வத்தல் – 2, பெருங்காயம் சிறிதளவு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
Step – 6:
நம்முடைய சுவையான வெங்காயம் தக்காளி இல்லாத சட்னி தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/chana-dal-chutney-chutney-without-tomato-onion-gokis-kitchen/