Site Overlay

How to make ragi sweet adai / Ragi Sweet Adai / Goki’s Kitchen

செய்ய தேவையான பொருட்கள்:

1. வெல்லம் – 1/2 கப்
2. தண்ணீர் – 1/2 கப்
3. ஏலக்காய் சிறிதளவு
4. ராகி மாவு – 1 கப்
5. தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
6. உப்பு சிறிதளவு
7. நெய் தேவையான அளவு

How to make ragi sweet adai / Ragi Sweet Adai / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் – 1/2 கப், தண்ணீர் – 1/2 கப், ஏலக்காய் சிறிதளவு சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்கவிடவும்.வெல்லம் கரைந்ததும் தனியே வைக்கவும்.

 

Step – 2:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு – 1 கப், தேங்காய் துருவல் – 3 ஸ்பூன் உப்பு சிறிதளவு சேர்த்து வெல்லம் வடிகட்டி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

Step – 3:
பின் ஒரு பட்டர் பேப்பர் எடுத்து அதில் நெய் தடவி கொஞ்சம் ராகி மாவு எடுத்து கையால் தட்டிக்கொள்ளவும்.

 

Step – 4:
தவாவில் நெய் சிறிதளவு சேர்த்து தட்டிவைத்த ராகி மாவை எடுத்து தவாவில் போட்டு மிதமான தீயில் வைத்த நெய் சேர்த்து திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

 

Step – 5:
சுவையான சத்தான ராகி இனிப்பு அடை தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *