தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் – 4 ஸ்பூன்
2. சீரகம் – 1/2 ஸ்பூன்
3. கொத்தமல்லித்தழை & கறிவேப்பில்லை சிறிதளவு
4. பச்சைமிளகாய் – 1
5. பூண்டு – 10 பல்
6. இஞ்சி – 1 இன்ச்
7. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
8. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
9. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
10. மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
11. மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
12. உப்பு தேவையான அளவு
13. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2
14. பிரெஷ் பட்டாணி – 1/4 கப்
15. இட்லி மாவு தேவையான அளவு
16. பெருங்காயம் சிறிதளவு
Stuffed Idli Recipe-Potato Stuffed Idli-Aloo Masala Stuffed Idli Recipe-Easy Idli Recipe-ஸ்டப் இட்லி செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன் ,சீரகம் – 1/2 ஸ்பூன் கொத்தமல்லித்தழை & கறிவேப்பில்லை சிறிதளவு சேர்த்து பச்சைமிளகாய் – 1 , பூண்டு – 10 பல் இஞ்சி – 1 இன்ச் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும்.
Step – 2:
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் . கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் ,மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன் ,உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
Step – 3:
பின் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2
பிரெஷ் பட்டாணி – 1/4 கப் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். பின் நன்கு மசித்து கொள்ளவும். அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
Step – 4:
ஆறியதும் வடை போல செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்
Step – 5:
இட்லி தட்டில் நெய் சேர்த்து இட்லி மாவு சிறிதளவு சேர்த்து கிழங்கு மசாலாவை சேர்த்து பின் மீண்டும் சிறிதளவு மாவை சேர்த்து கொள்ளவும் .
Step – 6:
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வைத்து 10 நிமிடம் சமைக்கவும்
Step – 7:
10 நிமிடம் கழித்து ஆறியதும் எடுக்கவும் நம்முடைய சுவையான ஸ்டப் இட்லி தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.