தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் தேவையான அளவு
2. சீரகம் -1 ஸ்பூன்
3. சோம்பு – 1/2 ஸ்பூன்
4. கறிவேப்பிலை சிறிதளவு
5. பச்சை மிளகாய் -2
6. மீடியம் சைஸ் வெங்காயம் -2
7. காளான் – 200 கிராம்
8. கேரட் – 1 கப்
9. பச்சை பட்டாணி – 1 கப்
10. தக்காளி பியூரி (8 மீடியம் சைஸ் தக்காளி)
11. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
12. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
13. சக்தி பிரியாணி மசாலா – 3 ஸ்பூன்ஸ்
14. உப்பு தேவையான அளவு
15. தேங்காய் பால் – 1 கப்
16. தண்ணீர் – 1 கப்
17. பாசுமதி அரிசி – 1 கப்
18. கொத்தமல்லித்தழை சிறிதளவு
19. புதினா சிறிதளவு
Tomato biryani recipe | Thakkali biryani | Tomato biryani in pressure cooker | தக்காளி பிரியாணி- எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
குக்கரில் எண்ணெய் சேர்த்து சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து பச்சை மிளகாய் -2 சேர்த்து, மீடியம் சைஸ் வெங்காயம் – 2 சேர்த்து நன்கு வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
Step – 2:
வெங்காயம் வதங்கியதும் 200 கிராம் காளான், கேரட் – 1 கப் பிரெஷ் பச்சை பட்டாணி -1 கப் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
Step – 3:
8 மீடியம் சைஸ் தக்காளியை மிஸ்சியில் அரைத்து அதை சேர்க்கவும்.பின் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,மிளகாய் தூள் – 1 ஸ்பூன், சக்தி பிரியாணி மசாலா – 3 ஸ்பூன்ஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
Step – 4:
எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் பால் – 1 கப்,தண்ணீர் – 1 கப் சேர்த்து பின் கொத்தமல்லித்தழை ,புதினா சிறிதளவு சேர்த்து நன்கு கொதிவந்ததும் 1 கப் பாசுமதி (ஊற வைக்க தேவையில்லை) அரிசியை சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும்.நம்முடைய சுவையான தக்காளி பிரியாணி தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.