Site Overlay

Sathu maavu kolukattai recipe in tamil / Sathu maavu kozhukattai for kids / Goki’s Kitchen

சத்துமாவு கொழுக்கட்டை
செய்ய தேவையான பொருட்கள்:

1. சத்து மாவு – 1 கப்
2. அரிசி மாவு – 2 ஸ்பூன்
3. வெல்லம் – 1/2 கப்
4. தண்ணீர் – 1/2 கப்
5. நெய் – 2 ஸ்பூன்
6. தேங்காய் – 1 கப்

Sathu maavu kolukattai recipe in tamil / Sathu maavu kozhukattai for kids / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
சத்துமாவு கொழுக்கட்டை செய்ய:

 Step – 1:
முதலில் வாணலியில் சத்து மாவு – 1 கப், சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

பின் அரிசிமாவு – 2 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.தனியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

  

 Step – 2:
ஒரு வாணலியில் வெல்லம் – 1/2 கப், தண்ணீர் – 1/2 கப் சேர்த்து வெல்லம் கரைத்ததும் அடுப்பை அனைத்து ஓரமாக வைக்கவும்.

   

 Step – 3:
அதே வாணலியில் நெய் – 2 ஸ்பூன், தேங்காய் – 1 கப் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். தேங்காய் நிறம் சற்று மாறும் வரை.

 

 Step – 4:
பின் அதையும் சத்துமாவு இருக்கும் பாத்திரத்திற்கு மாற்றவும். கரைத்து வைத்த வெல்லம் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் மூடிவைக்கவும்.

 Step – 5:
ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இட்லி தட்டில் நெய் தடவி கொழுக்கட்டை பிடித்து வைக்கவும் ரெண்டு இட்லி தட்டிலும் வைத்து மூடி 15 நிமிடம் சமைக்கவும்.

 

          

 Step – 6:
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு சத்தான சத்துமாவு கொழுக்கட்டை தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/health-mix-kozhukattai-recipe-multigrain-health-mix-powder-kozhukattai-for-kids-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *