தேவையான பொருட்கள்:
1. புளி – 150 கிராம்
2. எண்ணெய் – 150
3. மிளகாய் வத்தல் – 40
4. பச்சை மிளகாய் – 5
5. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
6. வெந்தயம் பவுடர் (வறுத்து அரைக்கவும்) – 1/4 ஸ்பூன்
7. கறிவேப்பிலை சிறிதளவு
8. இஞ்சி சிறிதளவு
9. கடலை – தேவையான அளவு
10. பெருங்காயம் சிறிதளவு
Puliyodharai Recipe in Tamil | Tamarind Rice | Puli Sadam Recipe in Tamil | Variety Rice Recipes எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
150 கிராம் புளியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு பிழிந்து புளி தண்ணீரியை தனியாக எடுத்துவைத்து கொள்ளவும்.
Step – 2:
ஒரு வாணலியில் 150 ml எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
Step – 3:
மிளகாய் வத்தல் – 40, பச்சை மிளகாய் -5 சேர்த்து பின் சிறிதளவு கறிவேப்பிலை & இஞ்சி சேர்த்து வறுக்கவும்.
Step – 4:
பின் புளி தண்ணீரை சேர்க்கவும்.பின் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் வெந்தயத் தூள் – 1/4 ஸ்பூன்,பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
Step – 5:
புளித்தண்ணீர் நன்கு வற்றும் வரை கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கி விடவும் நம்முடைய சுவையான புளியோதரை ரெடி … (5 நாட்கள் வரை நன்றாக இருக்கும்)
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.