தேவையான பொருட்கள்:
- நெய் – 2 ஸ்பூன்
- மீடியம் சைஸ் வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 4
- பட்டாணி 1/2 கப் (Fresh)
- புதினா சிறிதளவு
- தண்ணீர் – 2 கப்
- உப்பு தேவையான அளவு
- பாஸ்மதி அரிசி – 1 கப்
- மல்லித்தழை சிறிதளவு
சுவையான பச்சை பட்டாணி புலாவ் – Peas Pulao-Matar Pulao Recipe செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
குக்கரில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து, 2 மீடியம் சைஸ் வெங்காயம் சேர்த்து, 4 பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
Step – 2:
வெங்காயம் பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் 1/2 கப் பட்டாணி(Fresh peas) சேர்க்கவும்.பின் புதினா சிறிதளவு சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து
Step – 3:
பின் 2 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் நன்கு கொதித்ததும் 1 கப் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். சிறிதளவு மல்லித்தழை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும் 20 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும்.சூப்பரான பட்டாணி புலாவ் ரெடி.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.