தேவையான பொருட்கள்:
1 . பூண்டு – 10 பல்
2 . பச்சை மிளகாய் – 4
3 . இஞ்சி
4 . கையளவு கொத்தமல்லித்தழை
5 . கையளவு புதினா தழை
6 . நெய் தேவையான அளவு
7 . சீரகம் – 1 ஸ்பூன்
8 . சோம்பு – 1 ஸ்பூன்
9 . கசகசா – 1 ஸ்பூன்
10 . வெங்காயம் – 1
11 . தக்காளி – 1
12 . காளான் – 200 கிராம்
13 . உப்பு தேவையான அளவு
14 . பாசுமதி அரிசி – 1 கப்
உதிரி உதிரியா பிரியாணி வேணுமா காளான் பிரியாணி இப்படி செய்து பாருங்க-Mushroom Biryani எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு மிக்சிஜரில் பூண்டு – 10 பல்.பச்சை மிளகாய் – 4, இஞ்சி சிறிது, கையளவு கொத்தமல்லித்தழை,
கையளவு புதினா தழை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
Step – 2:
குக்கரில் நெய் சிறிதளவு சேர்த்து சீரகம் – 1 ஸ்பூன்,சோம்பு – 1 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன் ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் சேர்த்து வெங்காயம் சிறிது வதங்கியதும் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
Step – 3:
தக்காளி கொஞ்சம் வதங்கியதும் காளான் 200 கிராம் சேர்த்து மிக்சியில் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். காளானில் தண்ணீர் இருக்கும் அந்த தண்ணீர் வெளியே வரும் வரை நன்கு வதக்கவும.
Step – 4:
நன்கு வதங்கி காளானில் உள்ள தண்ணீர் வெளியே வந்ததும் ஒன்னரை கப் (1 &1/2) தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் பாசுமதி அரிசி 1 கப் (20 நிமிடம் ஊறவைத்து) தண்ணீர் நன்கு வடிகட்டி பின் குக்கரில் சேர்த்து நன்கு கலந்து 2 விசில் மிதமான தீயில் சமைக்கவும். 15 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். உதிரி உதிரியாக சுவையான காளான் பிரியாணி தயார்.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.