தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 1 கப்
- கடுகு – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- கடலை – 3 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 15
- பச்சை மிளகாய் – 4
- இஞ்சி சிறிதளவு
- கருவேப்பிலை சிறிதளவு
- பெருங்காயம் சிறிதளவு
- மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
- லெமன் ஜூஸ் – (3 மீடியம் சைஸ்)
- உப்பு தேவையான அளவு
- சாதம்
சுவையான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு கடாயில் 1 கப் எண்ணெய் சேர்த்து எண்ணெய்
சூடானதும் கடுகு – 1 ஸ்பூன்,கடலை பருப்பு – 2 ஸ்பூன்,கடலை – 3 ஸ்பூன்,காய்ந்த மிளகாய்- 15,பச்சை மிளகாய் – 4,இஞ்சி சிறிதளவு,கருவேப்பிலை சிறிதளவு 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
Step – 2:
2 நிமிடம் கழித்து பெருங்காயம் சிறிதளவு, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,
லெமன் ஜூஸ் – (3 மீடியம் சைஸ்) உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
Step – 3:
அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.சாதத்தை நன்றாக கலந்து பின் பரிமாறவும்.சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.