Site Overlay

தேங்காய் பால் புலாவ்- Coconut Milk Rice Recipe in Tamil-Coconut Milk Pulao-Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 
  1. நெய் தேவையான அளவு 
  2. சீரகம் – 1 ஸ்பூன்
  3. மீடியம் சைஸ் வெங்காயம் – 2
  4. பச்சை மிளகாய் – 6
  5. கேரட் – 1 கப்
  6. பீன்ஸ் – 1 கப்
  7. பச்சை பட்டாணி – 1 கப்( Fresh peas)
  8. உப்பு தேவையான அளவு
  9. தேங்காய் பால் – 2 கப்
  10. சீரக சம்பா அரிசி – 1 கப்
  11. மல்லி தழை சிறிதளவு
சுவையான தேங்காய் பால் புலாவ்- Coconut Milk Rice Recipe in Tamil-Coconut Milk Pulao  செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:

Step – 1:
குக்கரில் சிறிதளவு நெய் சேர்த்து, சீரகம் 1 ஸ்பூன் சேர்த்து, மீடியம் சைஸ் வெங்காயம் 2, சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பச்சை மிளகாய் 6 சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.  

Step – 2:
கேரட் – 1 கப்,பீன்ஸ் – 1 கப்,பச்சை பட்டாணி – 1 கப்( Fresh peas),உப்பு தேவையான அளவு சேர்த்து 8 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.  


Step – 3:
2 கப் தேங்காய் பால் சேர்த்து கொதித்ததும் 1 கப் சீரக சம்பா அரிசி சேர்த்து மல்லித்தழை சிறிதளவு சேர்த்து கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 20 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும்.
சுவையான தேங்காய் பால் புலாவ்ரெடி.


இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *