சுவையான அடை தோசை செய்வது எப்படி என்பதை இந்த போஸ்டில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி – 1 கப்
- துவரம் பருப்பு – 1/3 கப் (மூன்றில் ஒரு பங்கு)
- கடலை பருப்பு – 1/3 கப் (மூன்றில் ஒரு பங்கு)
- பாசிப்பருப்பு – 1/3 கப் (மூன்றில் ஒரு பங்கு)
- உளுத்தம் பருப்பு – 1/2 கப்
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- மிளகாய் வத்தல் – 2
இதை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி 1 டம்ளர்,துவரம் பருப்பு – 1/3 கப் (மூன்றில் ஒரு பங்கு), கடலை பருப்பு – 1/3 கப் (மூன்றில் ஒரு பங்கு), பாசிப்பருப்பு – 1/3 கப் (மூன்றில் ஒரு பங்கு) மொத்தம் ஒரு டம்ளர் பருப்பு நன்கு கழுவி 2 மிளகாய் வற்றல் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
Step – 2:
உளுத்தம் பருப்பு அரை டம்ளர் சேர்த்து நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
Step – 3:
2 மணி நேரம் கழித்து உளுத்தம் பருப்பை தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
Step – 4:
பின் அரிசி பருப்பு ஊறவைத்த வத்தல் அனைத்தையும் தண்ணீர் வடிகட்டி மிக்சியில் சேர்த்து அத்துடன் சிறிதளவு பெருங்காயத்தூள், பின் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.சீரகம் அரை ஸ்பூன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து உளுந்து மாவுடன் சேர்க்கவும். மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
Step – 5:
நன்கு கலந்து பின் அடுப்பில் கல் வைத்து தோசை சுடுவதுபோல் சுட்டு எடுத்தால் அடை தோசை தயார். இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.