Site Overlay

Mixed vegetable Curry recipe in Tamil / Mixed Vegetable kulambu / Goki’s Kitchen

பல காய் குழம்பு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

குழம்பு பொடி செய்ய:

1. முழு மல்லி விதை – 2 ஸ்பூன்
2. சாப்பாட்டு அரிசி – 1/4 ஸ்பூன்
3. துவரம் பருப்பு – 1/2 ஸ்பூன்
4. வெந்தயம் – 1/4 ஸ்பூன்
5. கருப்பு உளுந்து – 1/4 ஸ்பூன்
6. மிளகாய்வத்தல் – 7

குழம்பு செய்ய:

1. எண்ணெய் – 4 ஸ்பூன்
2. சீரகம் – 1/4 ஸ்பூன்
3. கடுகு – 1/4 ஸ்பூன்
4. கருவேப்பில்லை சிறிதளவு
5. பூண்டு – 4 பல்
6. சின்ன வெங்காயம் – 10
7. தக்காளி – 4
8. கத்திரிக்காய் – 2
9. சௌசௌ – 1
10. நூக்கல் – 1
11. பீன்ஸ் – 10
12. உப்பு தேவையான அளவு
13. பெருங்காயம் சிறிதளவு

Mixed vegetable Curry recipe in Tamil / Mixed Vegetable kulambu / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
குழம்பு பொடி செய்ய:

Step – 1:
ஒரு வாணலியில் முழு மல்லி விதை – 2 ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். மல்லி வாசம் வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் போட்டு தனியே வைக்கவும்.

Step – 2:
பின் சாப்பாட்டு அரிசி – 1/4 ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். சிறிது நிறம் மாறுவரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் போட்டு தனியே வைக்கவும்.

  

Step – 3:
துவரம் பருப்பு – 1/2 ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். சிறிது நிறம் மாறுவரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் போட்டு தனியே வைக்கவும்.

Step – 4:
வெந்தயம் – 1/4 ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். சிறிது நிறம் மாறுவரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் போட்டு தனியே வைக்கவும்.

    

Step – 5:
கருப்பு உளுந்து – 1/4 ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். சிறிது நிறம் மாறுவரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் போட்டு தனியே வைக்கவும்.

Step – 6:
மிளகாய்வத்தல் – 7 சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். சிறிது நிறம் மாறுவரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் போட்டு தனியே வைக்கவும்.

Step – 7:
வறுத்த அனைத்தும் நன்கு ஆறியதும் ஒரு மிஸ்சிஜரில் போட்டு நன்கு பொடி செய்து தனியே வைக்கவும். குழம்பு பொடி தயார்…

Step – 8:
பின் அதே வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன், கருவேப்பில்லை சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும்.

 

Step – 9:
பூண்டு – 4 பல், சின்ன வெங்காயம் – 10 சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும்.

Step – 10:
இந்த சைஸ் உள்ள தக்காளி 4 எடுத்து நன்கு கையால் நசுக்கு சேர்த்து தக்காளி நன்கு வதக்கும் வரை சமைக்கவும்.

Step – 11:
கத்திரிக்காய் – 2, சௌசௌ – 1, நூக்கல் – 1, பீன்ஸ் – 10 சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும்.

Step – 12:
அரைத்த குழம்பு பொடி சேர்த்து உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

 

Step – 13:
காய் வெகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு காய் வெந்ததும் அடுப்பைஅணைக்கவும்.

Step – 14:
நம்முடைய பல காய் குழம்பு தயார்… 

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/mixed-vegetable-curry-recipe-mixed-vegetable-curry-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *