தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் – 2 ஸ்பூன் 2
2. நெய் – 2 ஸ்பூன்
3. கடுகு – 1/2 ஸ்பூன்
4. உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
5. கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
6. பச்சைமிளகாய் – 1
7. கறிவேப்பில்லை சிறிதளவு
8. மல்லித்தழை சிறிதளவு
9. ரவா – 1 கப்
10. கேரட் – 2 துருவியது
11. உப்பு தேவையாள அளவு
12. தயிர் – 3/4 கப்
13. முந்திரி சிறிதளவு
சாஃப்டான ரவா இட்லி | Instant Rava Idli Recipe | Suji Idli | How to make Rava Idli at home | Breakfast recipes | rava idli recipe in tamil | செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
எண்ணெய் – 2 ஸ்பூன் 2 , நெய் – 2 ஸ்பூன் , கடுகு – 1/2 ஸ்பூன் , உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் ,பச்சைமிளகாய் – 1 ,கறிவேப்பில்லை சிறிதளவு ,மல்லித்தழை சிறிதளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
Step – 2:
கேரட் – 2 துருவியது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
Step – 3:
ரவா – 1 கப் சேர்த்து 5 நிமிடம் சமைக்கவும்.
Step – 4:
5 நிமிடம் கழித்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு தேவையான அளவு சேர்த்து 10 நிமிடம் ஆற வைக்கவும்.
Step – 5:
நன்கு ஆறியதும் தயிர் – 3/4 கப் சேர்க்கவும், தண்ணீர் 1 கப் சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
Step – 6:
20 நிமிடம் கழித்து 1 கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Step – 7:
ஒரு கடாயில் நெய் 1 ஸ்பூன் சேர்த்து முந்திரி சிறிதளவு சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளவும்.
Step – 8:
இட்லி தட்டில் நெய் தடவி வறுத்த முந்திரியை சேர்த்து ரவா இட்லி மாவு சேர்த்து கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் இட்லித் தட்டு வைத்து மூடி 10 நிமிடம் சமைக்கவும்.
Step – 9:
10 நிமிடம் கழித்து நம்முடைய சுவையான ரவா இட்லி தயார்.10 நிமிடம் ஆற வைத்து பரிமாறவும்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.