Site Overlay

Pudina Rice in Tamil – Variety Rice Recipes in tamil – புதினா சாதம் – Mint Rice in Tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. தேங்காய் சிறிதளவு
2. வெங்காயம் சிறிதளவு
3. பூண்டு – 5 பல்
4. இஞ்சி – 1 இன்ச்
5. பச்சை மிளகாய் – 5
6. ஒரு கையளவு மல்லித்தழை
7. ஒரு கையளவு புதினா
8. நெய் – 5 ஸ்பூன்
9. சீரகம் – 1/2 ஸ்பூன்
10. சோம்பு – 1/2 ஸ்பூன்
11. கிராம்பு – 2
12. பட்டை – 1 இன்ச்
13. பிரியாணி இலை – 1
14. முந்திரி தேவையான அளவு
15. வெங்காயம் – 1
16. பெருங்காயம் சிறிதளவு
17. தக்காளி – 2
18. உப்பு தேவையான அளவு
19. பிரெஷ் பட்டாணி – 1/2 கப்
20. பாசுமதி – 2 கப்
21. தண்ணீர் – 5 கப்
22. மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 

 

Pudina Rice in Tamil – Variety Rice Recipes in tamil – புதினா சாதம் – Mint Rice in Tamil – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சிறிதளவு ,வெங்காயம் சிறிதளவு ,பூண்டு – 5 பல் ,இஞ்சி – 1 இன்ச் ,
பச்சை மிளகாய் – 5,ஒரு கையளவு மல்லித்தழை ,ஒரு கையளவு புதினா சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

Step – 2:
குக்கரில் 5 ஸ்பூன் நெய் சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன் ,சோம்பு – 1/2 ஸ்பூன் ,கிராம்பு – 2 ,பட்டை – 1 இன்ச்
பிரியாணி இலை – 1, முந்திரி தேவையான அளவு  வெங்காயம் – 1, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

Step – 3:
பின் 2 தக்காளியை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மிளகாய் தூள் -1 ஸ்பூன் சேர்த்து பிரெஷ் பட்டாணி சேர்த்து அரைத்த மாசலவை சேர்க்கவும் மசாலாவின் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.

Step – 4:
2 கப் பாஸ்மதி அரிசி(ஊறவைக்க தேவை இல்லை)சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 3 விசில் விடவும் நம்முடைய சுவையான சுலபமான புதினா ரைஸ் தயார்.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *