Site Overlay

Healthy Millets Idly dosa batter recipe – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. ராகி – 1/2 டம்ளர்
2. சாமை – 1/2 டம்ளர்
3. வரகு – 1/2 டம்ளர்
4. சோளம் – 1/2 டம்ளர்
5. தினை – 1/2 டம்ளர்
6. குதிரைவாலி – 1/2 டம்ளர்
7. உளுந்து – 1 டம்ளர்
8. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
9. உப்பு தேவையான அளவு
10. நெய் சிறிதளவு

Healthy Millets Idly dosa batter recipe – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் ராகி – 1/2 டம்ளர், சாமை – 1/2 டம்ளர், வரகு – 1/2 டம்ளர்,சோளம் – 1/2 டம்ளர், தினை – 1/2 டம்ளர்
குதிரைவாலி – 1/2 டம்ளர், சேர்த்துக்கொள்ளவும். உளுந்து – 1 டம்ளர் தனியே ஊறவைக்கவும்.

Step – 2:
அனைத்தும் நன்கு 3 முதல் நான்கு தடவை கழுவி பின் வெந்தயம் – 1/2 ஸ்பூன், சேர்த்து மூடிவைத்து 8 மணி நேரம் அனைத்தையும் ஊறவைக்கவும்.

Step – 3:
8 மணி நேரம் கழித்து முதலில் உளுந்து மிஸ்சியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். தனியே எடுத்துக்கொள்ளவும்.

    

Step – 4:
பின் ஊறவைத்த சிறுதானியத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் தனியே எடுக்கவும். பின் அரைத்த உளுந்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்துகொள்ளவும்.

     

Step – 5:
மூடிவைத்து 8 மணிநேரம் புளிக்கவைக்கவும்.

Step – 6:
8 மணி நேரம் கழித்து இட்லி செய்ய தேவையான மாவு எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் எடுத்துக்கொள்ளவும். இட்லி தட்டில் நெய் தடவி இட்லி மாவு ஊற்றவும். இட்லி
பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டை வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.

   

நம்முடைய சத்தான சிறுதானிய இட்லி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *