Site Overlay

Paneer Pulao Recipe in Tamil/Paneer Rice in Tamil/Variety Rice Recipe/Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. நெய் தேவையான அளவு
2. பன்னீர் – 200 கிராம்
3. இலவங்கப்பட்டை – 1
4. பிரியாணி இலை – 1
5. கருப்பு ஏலக்காய் -1
6. ஜாவிதிரி – 1
7. ஏலக்காய் – 2
8. கிராம்பு – 2
9. மிளகு – 1/2 ஸ்பூன்
10. சீரகம் – 1 ஸ்பூன்
11. வெங்காயம் – 2
12. இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
13. தக்காளி – 2
14. பச்சைமிளகாய் – 1
15. புதினா மல்லித்தழை சிறிதளவு
16. கேரட் – 1 கப்
17. பீன்ஸ் – 1 கப்
18. பச்சை பட்டாணி – 1 கப்
19. கரம் மசாலா – 1 ஸ்பூன்
20. பாஸ்மதி அரிசி – 2 டம்ளர்
21. உப்பு தேவையான அளவு

Paneer Pulao Recipe in Tamil/Paneer Rice in Tamil/Variety Rice Recipe – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் நெய் 4 ஸ்பூன் சேர்த்து பன்னீர் – 200 கிராம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வருது தனியே எடுக்கவும்.

 

Step – 2:
அதே வாணலியில் இலவங்கப்பட்டை – 1, பிரியாணி இலை – 1, கருப்பு ஏலக்காய் -1, ஜாவிதிரி – 1, ஏலக்காய் – 2

கிராம்பு – 2, மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன் வெங்காயம் – 2 சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

 

Step – 3:
பின் இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

Step – 4:
பின் தக்காளி – 2 சேர்த்து தக்காளி நன்கு மாசியும் வரை வதக்கவும்.

Step – 5:
பின் பச்சைமிளகாய் – 1, புதினா மல்லித்தழை சிறிதளவு சேர்த்து கேரட் – 1 கப், பீன்ஸ் – 1 கப், பச்சை பட்டாணி – 1 கப் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  

Step – 6:
பின் குக்கரில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து வதக்கியதை சேர்த்து கலந்துவிடவும்.

Step – 7:
பின் கரம் மசாலா – 1 ஸ்பூன் சேர்த்து கலந்து பாஸ்மதி அரிசி – 2 டம்ளர் (40நிமிடம் ஊறவைத்து) சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து வறுத்த பன்னீர் சேர்த்து சிறிதளவு புதினா சேர்த்து கலந்து விடவும்.

 

Step – 8:
பின் குக்கரை மூடி 1 விசில் விட்டு 20 நிமிடம் கழித்து எடுக்கவும்

நம்முடைய சுவையான மணமான பன்னீர் புலாவ் தயார்…

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *